ஆன்மிகம்
சூரிய நமஸ்காரம்

பிரச்சினை வரும் முன் காப்பது எப்படி?

Published On 2020-03-31 05:03 GMT   |   Update On 2020-03-31 05:03 GMT
பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கான தீர்வையும் தந்திருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் எந்த விதமான வைரஸ் வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கான தீர்வையும் தந்திருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் எந்த விதமான வைரஸ் வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கை பிரபஞ்சம் தந்த வரம் சூரியக் குளியல். தினமும் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது, 1 மணி நேரம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருக்க வேண்டும்.

நவக்கிரக சமித்துகளால் ஹோமம் நடத்த வேண்டும். ஹோமத்தில் செவ்வாயின் சமித்தான கருங்காலி, புதனின் சமித்தான நாயுருவி, குருவின் சமித்தான அரசு, ராகுவின் சமித்தான அருகு, கேதுவின் சமித்தான தர்ப்பை ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள வைரஸ் கிருமிகள் எதுவாக இருந்தாலும் அழியும். ஹோமம் நடத்த இயலாதவர்கள் தினந்தோறும் குறிப்பிட்ட மூலிகை குச்சிகளை நெருப்பில் இட்டு ஹோமப் புகையை உற்பத்தி செய்து, வீட்டை சுத்தப்படுத்தலாம். மந்திரங்கள் மூலம் நல்ல அதிர்வலைகள் ஏற்படும். ஹோமப் புகையை சுவாசிக்கும் போது நுரையீரலை ஆக்கிரமிக்கும் நோய் கிருமிகள் உருவாகாது.

வீட்டின் உள் பகுதியில் சூரிய வெளிச்சம் படும்படி கதவு, ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.

அசைவ உணவை இயன்றவரை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த சுத்தமான பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். நன்றாக சுத்தம் செய்த பாத்திரத்தைப் பயன்படுத்தி சமைக்க வேண்டும்.

கொதித்து ஆறிய சுத்தமான குடிநீரை பருக வேண்டும்.

தினமும் குளித்து விட்டு துவைத்த சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.

தேவையின்றி அடுத்த நபரை தொட்டு பேசுதல் கூடாது.

எச்சில் மற்றும் அடுத்த நபர் கைபட்ட உணவை உண்ணுதல் கூடாது.

Tags:    

Similar News