ஆன்மிகம்
திருக்கோஷ்டியூர்

பாவங்கள், தோஷங்களை போக்கும் மகாமக கிணறு

Published On 2020-03-17 05:07 GMT   |   Update On 2020-03-17 05:07 GMT
மாசிமக நாளில் திருக்கோஷ்டியூர் கோவில் மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
நவக்கோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புருரூபன், அரச சக்கரவர்த்தியாக திகழ்ந்தவன். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார்.

தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.
Tags:    

Similar News