ஆன்மிகம்
விஷ்ணு, சிவன், துர்க்கை

மாசிமகம் அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்

Published On 2020-03-05 05:40 GMT   |   Update On 2020-03-05 05:40 GMT
சிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.
மாசி மகம் அன்று பார்வதி - பரமேஸ்வரரை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.

சிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.

பார்வதி தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். எனவே அன்றைய தினம் சக்தி வழிபாடு மற்றும் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.

மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.

சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், இயன்ற வரை அன்னதானம் செய்தால், கோடி புண்ணியம் வந்து சேரும்.


Tags:    

Similar News