ஆன்மிகம்
காசி விசுவநாதர், காசி விசாலாட்சி

திருமணம், மகப்பேறு அருளும் காசி விசுவநாதர்

Published On 2020-03-04 10:47 IST   |   Update On 2020-03-04 10:47:00 IST
ஈரோடு காசி விசுவநாதர் தலத்திற்கு நேரில் வந்து அம்மையப்பரை தரிசிப்போருக்கு திருமணம், மகப்பேறு, தொழிற்கல்வி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பது பலனடைந்தவர்கள் கூறும் தகவல்.
காசிக்கு நிகரான சிவத்தலங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஈரோடு அருகே குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆலயம்.

இத்தலத்திற்கு நேரில் வந்து அம்மையப்பரை தரிசிப்போருக்கு மறுபிறவி இல்லையென்று நம்பப்படுகிறது. திருமணம், மகப்பேறு, தொழிற்கல்வி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பது பலனடைந்தவர்கள் கூறும் தகவல். மேலும் தொழில் சிக்கல் தீரவும், தம்பதி அன்னி யோன்யமாக வாழவும் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் இக்கோவில் இருக்கிறது. திருச்செங்கோடு - ஜேடர்பாளையம் வழியில் கள்ளுக்கடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கில் 1 கிலோமீட்டர் அருகில் வடுகபாளையம் காவிரிக்கரை அமைந்துள்ளது.

Similar News