ஆன்மிகம்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்

சாப விமோசனம் தரும் தலம்

Published On 2020-02-29 05:27 GMT   |   Update On 2020-02-29 05:27 GMT
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் வந்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திரிபுரசுந்தரி அல்லது சொக்கநாயகி, வள்ளிதெய்வானையுடன் முருகன், விஜயகணபதி எனும் வினாயகர், நடன காட்சியில் தியாகராஜராக சிவன், நவகிரகங்கள், மூன்று மூன்ற லிங்கங்களாக 36 வரிசையில் 108 சிவ லிங்கங்கள், கால பைரவர், 63 நாயன்மார்கள் போன்றவர்களின் தனி சன்னதிகள் உள்ளன.

ஆலயம் காலை ஆறு முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை மூன்று முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்து உள்ளது. ஆலயம் ஏழாம் அல்லது பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆனால் நிச்சயமாக ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு உள்ளதாம். சோழ மன்னர்கள் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. அதனால் இந்த ஊரும் திருவாளர் வான் மீகி எனும் பெயரைத் தரும் திரு வான்மீகி என ஆகி பின்னர் மருவி திருவான்மீயூராகியது.

இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாலயத்திற்கு வந்து தமது நோயை நீக்கி சுகம் பெற்றவர்கள் பலர். அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும்.
Tags:    

Similar News