ஆன்மிகம்
நாகர் சிலை

குழந்தை பாக்கியம், திருமண யோகம் தேடி வர பரிகாரம்

Published On 2020-02-20 06:35 GMT   |   Update On 2020-02-20 06:35 GMT
குழந்தை பாக்கியம், திருமண தடையால் அவதிப்படுபவர்கள் நாகராஜா கோவிலுக்கு சென்று கல் நாகர் வைத்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் ராகு இருந்தால் அது நாக தோஷம் ஆகும். இதனால் திருமணம் கைகூடுவது தள்ளிக்கொண்டே போகும். அதுமட்டுமின்றி ராகுவின் செயல்பாடுகள் காரணமாக வேறுசில பிரச்சினைகளும் ஏற்படும். 2-ம் இடத்து ராகு தனம் மற்றும் கண் பிரச்சினையை உண்டு பண்ணும். 4-ம் இடத்து ராகு வீடு, வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

5-ம் இடத்து ராகு குழந்தை பாக்கியத்தில் தாமதம் தரும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். 8-ம் இடம் ஜீவனை குறிக்கும். 10-ம் இடம் தொழிலைலையும், 12-ம் இடம் விரையத்தையும் சுட்டிக் காட்டும். எனவே ராகுவின் இடத்துக்கு ஏற்ப லாபமோ நஷ்டமோ ஏற்படும். இவற்றில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவசியம் நாகராஜா கோவிலில் பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக கல் நாகர் வைத்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் கைகூடும்.

வேப்பமரம் நட்டால் குழந்தை பாக்கியம்

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது. இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

போகர் கூறிய எளிய பரிகாரம்


“நாக சதுர்த்தி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவ லிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.
Tags:    

Similar News