ஆன்மிகம்
சாரநாதப்பெருமாள்

குழந்தை வரம் அருளும் சாரநாதப்பெருமாள்

Published On 2019-11-27 04:52 GMT   |   Update On 2019-11-27 04:52 GMT
திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவிலில் உள்ள சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது, இத்தல சார புஷ்கரணியில் நீராடி சார நாத பெருமாளை வழிபட்டால், சகல தோஷங்களும், முன்ஜென்ம வினைகளும், கிரக தோஷங்களும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் அகன்று, வாழ்வில் நல்வளம் பெருகும் என்று தல புராணம் சொல்கிறது.

காவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோலத்தில் இருக்கும் திருக்கோவில், சார புஷ்கரணியின் மேற்குக்கரையில் அரசமரத்தடியில் அமைந்துள்ளது. சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
Tags:    

Similar News