ஆன்மிகம்
பித்ருபூஜை

வருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை

Published On 2019-11-26 06:20 GMT   |   Update On 2019-11-26 06:20 GMT
வருமானத்தில் ஒரு பகுதியை தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.
உலகை ஆளும் பரமசிவனிடம் ஒரு நாள் பார்வதிதேவி, ஒரு மனிதனின் இல்லற தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரமசிவன் கூறியதாவது:-

அறிவுள்ள மனிதன் தொழில் மூலமாக தான் பெறும் செல்வத்தை மூன்று பாகங்களாக பிரித்து அதில் தர்ம காரியங்களுக்கு ஒரு பாகம். வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பாகம். கஷ்டம் ஏற்படுகையில் ஒரு பாகம் என்று பங்கீடு கொள்ள வேண்டும். இதில் முதல் பாகம் அன்னதானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது. தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.
இவ்வாறு சிவபெருமான் கூறினார்.

பித்ருக்கள் ஒருபோதும் சாபமிட மாட்டார்கள். ஆனால் மனவருத்தம் கொள்ளுவார்கள். அந்த வருத்தம் கோடானுகோடி சாபங்களுக்கு இணையானது. அதற்கு மன்னிப்பே கிடையாது. அதற்கு நிவர்த்தி பெற பித்ரு பூஜை ஒன்றுதான் சிறந்த வழி. அமாவாசை, மகாளயபட்சம், சிரார்த்த அங்க தர்ப்பணம் என்று சிரத்தையுடன் செய்து, சங்கல்ப தானங்களான அன்னதானம், வித்யா தானம் என்று முடிந்த அளவு செய்தால் போதும் கட்டாயம் பித்ருக்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து பெற்றுக் கொள்வார்கள்.
Tags:    

Similar News