ஆன்மிகம்
புலீஸ்வரி அம்மன், கோவில்

திருமண தடை நீக்கும் புலீஸ்வரி அம்மன்

Published On 2019-11-23 06:22 GMT   |   Update On 2019-11-23 06:22 GMT
புலீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில்.

இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பே, திருமணம்தான். இங்கு அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணம் நடைபெறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இங்கு திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதேப் போல் திருமண தடை உள்ள ஆண்- பெண் இருபாலாரும் இந்த ஏழு அம்மனுக்கும் வஸ்திரங்கள் சாத்தி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். அப்படி திருமணம் கைகூடும் பக்தர்கள் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை வைத்துக் கொண்டாலும் திருமாங்கல்யத்தை புலீஸ்வரி அம்மன் சன்னிதியில் தான் வைத்து கட்டுகிறார்கள். இதை ஒரு நேர்த்திக் கடனாகவே அனைவரும் செய்கிறார்கள்.

இந்த அம்மனிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்தை இந்த ஆலயத்தில்தான் நடத்துகிறார்கள். அப்படிப் பெயர் வைக்கும் வைபவம் நடத்தி முடித்தவுடன் சில காலம் கழித்து அந்த குழந்தையை இக்கோவிலில் அம்மனிடம் தத்து கொடுத்து, பின் வாங்கிக் கொள்கிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து கொள்ளிடத்திற்கு ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
Tags:    

Similar News