ஆன்மிகம்

திருப்பாம்புரம் கோவிலில் பரிகார பூஜை செய்வது எப்படி?

Published On 2019-03-08 09:24 GMT   |   Update On 2019-03-08 09:24 GMT
ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலமாகும். இந்த கோவிலில் எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலம். ராகு-கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 ஆண்டு ராகு தசை நடந்தால் 7 ஆண்டு கேது தசை நடந்தால், லக்கினத்திற்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ ராகுவோ இருந்தால், ராகு புக்தி, கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம் புத்திர தோஷம் இருந்தால் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், பாம்பை அடித்திருந்தால் கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து ராகு, கேது பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வது அவசியம்.

பரிகாரம் செய்ய விரும்புவோர் ஆலய அலுவலகத்தில் முன்புதிவு செய்ய வேண்டும். அபிஷேகப் பொருள்கள், வெள்ளி நாகம், பால் ஆகிய ஆலய நிர்வாகத்தால் வழங்கப்படும். வெள்ளி நாகத்துக்கு அபிஷேகம் செய்து, பின்னர் ராகு, கேதுவுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நேரம் உகந்தது.
Tags:    

Similar News