ஆன்மிகம்

நோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்

Published On 2019-02-18 08:16 GMT   |   Update On 2019-02-18 08:16 GMT
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி வரும் ஜனவரி மாதம் 5-ம்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் ஆஞ்சநேயருக்கு களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கும் .அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே உள்ள ராமபிரானுக்கு புஷ்பாபிசேகம் நடக்கும். பின்னர் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வித துன்பங்களும் விலகும் என்பதால், மும்மூர்த்திகளை வணங்கி விட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதை வழக்கமாக உள்ளனர்.
Tags:    

Similar News