ஆன்மிகம்

நாகதோஷம் நீக்கும் சோழீஸ்வரர்

Published On 2018-04-11 05:15 GMT   |   Update On 2018-04-11 05:15 GMT
சோழீஸ்வரர் கோவில் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்து பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு.

நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.

நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள். தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள துவாக்குடியில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு.
Tags:    

Similar News