ஆன்மிகம்

பயம் நீங்கி மனதில் தைரியம் தரும் ராகு

Published On 2018-03-20 09:24 GMT   |   Update On 2018-03-20 09:24 GMT
ராகு காலத்தில் உக்கிர தெய்வங்களை வழிபட்டால், நம்மிடம் ஏற்படும் எல்லாவித பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் ஆகும். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும்.

கிழமையைப் பொறுத்து ராகு கால நேரம் மாறும். இந்த நேரத்தில் வெளியூர் பயணம், புதியமுயற்சி, சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்வது கூடாது. இந்த நேரத்தில் உக்கிர தெய்வங்களான துர்க்கை, பைரவர், சண்டீதேவி, நரசிம்மர், பிரத்யங்கிரா, காளி, அங்காரகர்(செவ்வாய்) போன்ற தெய்வங்களை வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால், நம்மிடம் ஏற்படும் எல்லாவித பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும்.

ராகு காலம் நல்லதும் செய்யும் யாருக்கு என்றால் ராகு நட்சத்திரத்தில்(திருவாதிரை, சுவாதி, சதயம்) பிறந்தவர்களுக்கும் ராகு தசை, புத்தி நடப்பவர்களுக்கும், ராகு = மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராசிகளில் உள்ள ஜாதகர்களுக்கும் ராகு காலத்தில் தீமை எதுவும் நடக்காது.
Tags:    

Similar News