ஆன்மிகம்

புத்திரதோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்

Published On 2018-02-17 06:27 GMT   |   Update On 2018-02-17 06:27 GMT
புத்திரதோஷம் எதனால் ஏற்படுகிறது. அதற்கு உரிய எளிய முறையான பரிகாரங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவதூஷணை செய்ததாலும், முன்னோர்களுக்கு முறையாக ஈமக் கடன் செய்யாததாலும், தகப்பனுடைய சாபத்தினாலும், முன்னோர்களின் சாபத்தினாலும்  புத்திரதோஷம் ஏற்படுகிறது. புத்திரதோஷத்திற்கான எளிய பரிகாரங்களை பார்க்கலாம்.

* சந்திரனால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், பெண் சாபத்தாலும், தாயாரை சரியாக கவனிக்காததாலும் தோஷம் ஏற்படுகிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

* செவ்வாயால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், தனது எதிரிகளின் சாபத்தாலும், சகோதர, சகோதரிகளை சரியாக பராமரிக்காததாலும் அவர்கள் இட்ட சாபத்தினால் தோஷம் நேர்ந்ததை அறியலாம். இதற்கு முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு உணவு, உடை வழங்குவதால் அவர்களின் ஆசிபெற்று தோஷ பரிகாரம் பெறலாம்.

*  குரு பகவானால் தோஷம் ஏற்பட்டால் அந்தணரைக் கொன்ற பாவத்தாலோ, குல தெய்வக் குற்றத்தாலோ, மரங்களை காரண காரியமின்றி வெட்டியதால் உண்டான சாபத்தாலோ புத்திர தோஷம் ஏற்பட்டதை அறிய வேண்டும். குலதெய்வ வழிபாடு. வயோதிக அந்தணருக்கு தானதர்மம் செய்தல், திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்வதன் மூலம் பரிகாரம் தேடலாம்.

* சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால் மனைவியின் சாபந்தாலோ, பெண்ணை ஏமாற்றியதலோ, பசுவதை செய்ததாலோ ஏற்பட்ட தோஷம் என அறியலாம். இதற்கு ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, மருத்துவ உதவி செய்தல், பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்ற செயல்களைச் செய்தால் பரிகாரம் கிடைக்கும்.

* சனியினால் ஏற்பட்ட தோஷம் என்றால், பிறர் மனைவியை அபகரித்ததால் உண்டான கணவனின் சாபத்தினாலும், நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளியின் சாபத்தாலும், ஏற்பட்ட தோஷமாகும். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு கைத்தடி, சைக்கிள் தானம் செய்வதன் மூலமும் பரிகாரம் தேடலாம்.
Tags:    

Similar News