ஆன்மிகம்

திருமண தடை நீக்கும் மச்சக்கார பாலமுருகன்

Published On 2018-02-14 09:54 IST   |   Update On 2018-02-14 09:54:00 IST
வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில் உள்ள முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
சென்னை, வானகரம் மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது, மச்சக்கார பாலமுருகன் திருக்கோவில். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் வலது கன்னத்தில், சிவப்பு நிறத்தில் மச்சம் போல் காணப்படுகிறது.

எனவே இவரை ‘மச்சக்கார பாலமுருகன்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆலயம் செவ்வாய் மற்றும் ராகு தோஷம் நீக்கும் தலம் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தல முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. பெரும்பாலான கோவில்களில், பைரவர் தனியாகத்தான் காணப்படுவார்.

ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் பைரவர் தம்பதி சமேதராய் வீற்றிருக்கிறார். அஷ்டமி திதியன்று இங்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும். இப்பூஜையில் கலந்து கொண்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுகிறது.

Similar News