ஆன்மிகம்

சர்ப்ப தோஷங்களை போக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜர்

Published On 2018-01-29 04:41 GMT   |   Update On 2018-01-29 04:41 GMT
ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடர்கள் சொல்வதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் காள - சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படுவதாகும். 

இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலங்களில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும். சர்ப்பங்களில் முதன்மை ஆனவரான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீ ராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. 

ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஆதிசேஷன் உருவாக்கியதால் இந்த குளத்தில் நீராடி, ஸ்ரீ ராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யுதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, காளசர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பலன்களைத்தரும்.
Tags:    

Similar News