ஆன்மிகம்

ஸ்ரீவைகுண்டத்தில் சூரிய தோஷ நிவர்த்தி கோவில்

Published On 2018-01-13 08:08 GMT   |   Update On 2018-01-13 08:08 GMT
ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வைகுண்டநாதனை வேண்டிக் கொள்ளலாம்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் வைகுண்டநாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பக்தர்கள் பிறவா நிலை (மோட்சம்) கிடைக்க, இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

தை முதல் நாளில் இத்தலத்து கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் அணிவித்து பூஜை நடத்துவார்கள். பின், அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். இதையடுத்து ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் இங்கு காட்சி தருவதாக ஐதீகம். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற கருடனுக்கு சந்தன காப்பு செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
Tags:    

Similar News