ஆன்மிகம்

திருமணம் நடைபெற எளிய பரிகாரங்கள்

Published On 2017-04-01 09:27 GMT   |   Update On 2017-04-01 09:27 GMT
திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.

மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க; அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது.

வியாபாரிகள் தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்குமம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.

திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.



விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தெசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.

ஸ்ரீ மந்நாராயணனின் அம்சமாகப் போற்றப்படுவது அரச மரம். அரச மரத்தின் வேரில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வுதாயும் புராணங்களில் கூறப்படுகிறது.

திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுக்க வேண்டும். விரைவில் திருமணம் நடைபெறும்..!!

Similar News