ஆன்மிகம்
நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-11-15 04:19 GMT   |   Update On 2021-11-15 04:19 GMT
நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது.
நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. இறுதி நாளான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றி, புதுநன்மை உறுதிபூசல் வழங்குகிறார். அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள் சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7 மணிக்கு தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடக்கிறது.
Tags:    

Similar News