ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: நீதியுள்ள வாழ்க்கை

Published On 2021-03-08 05:42 GMT   |   Update On 2021-03-08 05:42 GMT
இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.
இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தின் பாவத்தை சிலுவையிலே சுமந்து தீர்த்தார் என்று நாம் பார்க்கிறோம்.

ஆதாம் மூலம் மனுக்குலத்திற்கு வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த வேதனையை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.

வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில் நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் என்று சொல்லப்படுள்ளது. 1 பேதுரு 2-ம் அதிகாரம், 24-ம் வசனத்தில் நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குபிழைத்திருக்கும் படிக்கு அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

எனவே தேவ பிள்ளைகளே நமக்காக சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்க வில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.

சகோ.கிங்ஸ்லி, கே.செட்டிபாளையம்.

Tags:    

Similar News