ஆன்மிகம்
இயேசு

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது

Published On 2021-02-17 01:49 GMT   |   Update On 2021-02-17 01:49 GMT
கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது.
கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இதனை லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் என்றும் சொல்வது உண்டு. இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று வருவதால், தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.

இதையொட்டி தேவாலயங்களில் இன்று காலை சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பார்கள். மேலும் தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும்.

தவக்காலமான 40 நாட்களின் தொடர்ச்சியில் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் நிகழ்வுகளும் நடைபெறும். அதன்பின்னர் புனித வெள்ளியும் கடைப்பிடிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-வது நாளில் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.
Tags:    

Similar News