ஆன்மிகம்
ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மாலை ஆராதனை

Published On 2021-02-01 04:33 GMT   |   Update On 2021-02-01 04:33 GMT
உவரி அந்தோணியார் திருத்தல திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பழமையானது உவரி அந்தோணியார் திருத்தலம். இத்திருத்தல திருவிழா கடந்த 19-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து நடந்து வந்தது. திருவிழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலையில் மறைரை, நற்கருணை ஆசீர் முதலியவை நடந்தது.

நேற்று முன்தினம் மாலையில் திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே. செல்வராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள் வளன் மற்றும் நிதிக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News