ஆன்மிகம்
முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தபோது எடுத்த படம்.

சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி

Published On 2021-01-27 04:00 GMT   |   Update On 2021-01-27 04:00 GMT
முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது. தினமும் இரவில் பல்சுவை பட்டிமன்றம், கிராமிய கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது.

9-ம் நாளான நேற்று முன்தினம் மாலை ஆராதனை நடைபெற்றது. இரவில் புனித சின்னப்பரின் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் தேரின் முன்பாக கும்பிடு சேவை செய்து வழிபட்டனர்.

10-ம் நாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தைகள் அலோசியஸ் அடிகளார், சந்தியாகு அடிகளார், அலெக்ஸ் அடிகளார், செல்வராஜ் அடிகளார், சுதர்சன அடிகளார், ஊர் தலைவர் பிரகாசம், செயலாளர் ஆர்.எஸ்.வில்சன், பொருளாளர் செபஸ்தியான், துணை தலைவர் ஆரோக்கியம், கணக்கர் சார்லஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவில் கொடியிறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுைவ பட்டிமன்றம், மின்னொளி கபடி போட்டி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிங்கம்பாறை இறைமக்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News