ஆன்மிகம்
நாகர்கோவில் குருசடி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்

நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2021-01-09 06:04 GMT   |   Update On 2021-01-09 06:04 GMT
நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயம் நாகர்கோவில் குருசடியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தன.

இதனைதொடர்ந்து 6.40 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணியாளர் இயேசுரெத்தினம் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கார்மல் நகர் பங்கு பணியாளர் சகாயபிரபு, கார்மல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைமன்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். அப்போது ஆலய நிர்வாகிகள் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினர்.

2-ம் நாளான இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, செபமாலை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மணக்குடி இணைப்பணியாளர் அருட்பணி ஞானராய் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட அன்பியப்பணிக்குழு இயக்குனர் அருட்பணி வலோரியன் அருளுரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக கீழ ஆசாரிபள்ளம் பங்குபணியாளர் அந்தோணிபிச்சை கலந்து கொள்கிறார்.

9-ம் நாள் திருவிழாவன்று காலை 6.30 மணிக்கு செபமாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை நடக்கிறது. வட்டக்கரை பங்குப்பணியாளர் ஆண்ட்ரூஸ் அருளுரையாற்றுகிறார். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறும்.

10-ம் நாள் திருவிழாவில், அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். காலை 9.30 மணிக்கு மேல் ஆசாரிபள்ளம் பங்குபணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News