ஆன்மிகம்
பண்டிகை கால உற்சாகத்தை பெருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்புகள்

பண்டிகை கால உற்சாகத்தை பெருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்புகள்

Published On 2020-12-25 04:36 GMT   |   Update On 2020-12-25 04:36 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் கரைபுரண்டோடும். கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகள், வண்ண, வண்ண தோரணங்கள், ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் என வீதிகள் எங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும்.

* கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கும் கிறிஸ்துமஸ் மரம் பண்டிகை கால உற்சாகத்தை மேலும் அதிகரிக்கிறது. பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது. அதன்படியே
கிறிஸ்துமஸ்
மரங்கள் பண்டிகையையொட்டி வாசலை அலங்கரிப்பதை தற்போதும் காண முடிகிறது.

* 1521-ம் ஆண்டு பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்துக்கு பிறகு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை பாரீஸ் நகருக்கு கொண்டு வந்து விழா கொண்டாடியதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக கூறப்படுகிறது. 18-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் முகப்பில் வைத்து அலங்கரிக்கும் வழக்கம் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெகுவாக பரவி இருந்தது.

* கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பது கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பம்சமாகும். அதேபோல மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் ஏசுவின் 3 பரிமாணங்களை குறிக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஏசு பிறந்த நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தம் உடையது என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.
Tags:    

Similar News