ஆன்மிகம்
வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கும் பணி மும்முரம்

வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கும் பணி மும்முரம்

Published On 2020-12-23 12:23 IST   |   Update On 2020-12-23 12:23:00 IST
வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

Similar News