ஆன்மிகம்
அலங்கார உபகார மாதா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இன்று சப்பர பவனி

Published On 2020-12-07 08:45 GMT   |   Update On 2020-12-07 08:45 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழாவில் இன்று இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 

விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடக்கிறது. (இன்று )7-ம் திருவிழா, 8-ம் திருவிழா அன்று இரவு 9 மணிக்கு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவன்று இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்க தேர் பவனியும் நடக்கிறது.

10-ம் திருவிழாவன்று அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியஸ் தலைமையில் தங்க தேர் திருப்பலியும், 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9 மணிக்கு மாதா சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும், தொடர்ந்து 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்கு தந்தைகள் லெனின், சுரேஷ், சிபு, பங்கு பேரவை துணை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News