ஆன்மிகம்
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தபோது எடுத்தபடம்.

பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி

Published On 2019-08-16 04:12 GMT   |   Update On 2019-08-16 04:12 GMT
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நார்பட் தாமஸ் அர்ச்சித்து கொடியேற்றினார். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

9-ந் திருநாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது.

10-ந் திருநாளான நேற்று அதிகாலை அன்னையின் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து ஆயர் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடும், நற்கருணை ஆசீரும் நடந்தது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ தலைமையில் உதவி பங்குத்தந்தை, பங்கு நிதிக்குழு, பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News