ஆன்மிகம்
இயேசு

தன்னை அறிவோம்

Published On 2019-08-15 03:17 GMT   |   Update On 2019-08-15 03:17 GMT
ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஏராளமான ஆற்றல்கள் மறைந்து இருக்கின்றன. இவற்றை உணர்ந்த கொண்டவன் வலிமை மிக்கவனாக இந்த உலகில் பயணம் செய்கிறான்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஏராளமான ஆற்றல்கள் மறைந்து இருக்கின்றன. இவற்றை உணர்ந்த கொண்டவன் வலிமை மிக்கவனாக இந்த உலகில் பயணம் செய்கிறான். தன்னை உணர்ந்தவனே இந்த உலகில் அனைத்தையும் வென்று காட்டுகிறான்.

ஒரு மனிதன் தான் செல்லும் வழியில் யானை ஒன்று சிறிய சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை கண்டான். உடனே அச்சம் கொண்டவனாய் யானை அருகில் சென்று அந்த பாகனிடம் கேட்டான். இவ்வளவு பெரிய யானையை ஒரு சிறிய சங்கிலியால் கட்டி வைத்து இருக்கிறாயே சங்கிலியை அறுத்து விட்டு கலகம் செய்து விடாதா? என்று. அதற்கு பாகன் இந்த யானை சிறியதாக இருந்த போது அதனை கட்டுவதற்கு ஒரு சிறிய சங்கிலி தேவைப்பட்டது. இந்த சங்கிலி அதற்கு போதுமானதாக இருந்தது. அது வளர்ந்த பின்பும் அந்த சங்கிலியின் பிணைப்பில் இருந்து விடுபடவே முடியாது என் மனநிலையுடன் உள்ளது என்றான்.

இந்த யானையை போலவே நம்முடைய பலங்களை தெரியாமல் பல நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னை அறிந்தவன் வாழ்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவான். எவ்விதமான கலக்கங்களும் அவனை ஒன்றும் செய்திடாது. முடிந்த அளவுக்கு வாழ்வுக்குரிய ஏராளமான விழுமியங்களை தொடர்ந்து வாழ்ந்து காட்டுகிறவனாக உருமாறுவான். இறையருள் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய காரியங்களுள் தன்னை அறிதல் மிக முக்கியமான ஒன்றாகும்.

வரலாற்றில் ஞானிகள், சான்றோர்கள், உயர்ந்தவர்கள் என போற்றப்படுகிறவர்கள், மதிக்கப்படுகிறவர்கள் அனைவரும் தன்னை அறிந்தவர்களே ஆவார். தன்னை அறிந்து கொண்டதால் தான் உலகிற்கு வழிகாட்ட முடிந்தது. உலகத்தில் நிரந்தரமான செய்கைகளை உருவாக்க முடிந்தது. இறைமகன் இயேசு கிறிஸ்து இதைத்தான் நானே உலகின் ஒளி என சான்றுரைத்தார். தனது வாழ்வால் உலகத்தில் உள்ள ஏராளமானோருக்கு வழிகாட்டினார். அவரது வழிகாட்டுதலில் பயணம் செய்கிற நாமும் தன்னை அறிந்து உலகத்தை செம்மைபடுத்துவோம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார்மறைமாவட்டம்.
Tags:    

Similar News