ஆன்மிகம்
புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-08-10 03:39 GMT   |   Update On 2019-08-10 03:39 GMT
நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியூஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவருக்கு ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்குமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடந்த திருப்பலியில் முளகுமூடு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுறை யாற்றினார். விழாவில், குருகுல முதல்வர் ஜெயசந்திர ரூபன், கிறிஸ்துநகர் பங்குதந்தை அருள் ஆனந்த், அருட்பணியாளர் அருள், இசைக்குழு தலைவர் காலேப் மற்றும் ஆலய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, ஆடம்பர கூட்டுத்திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். 16-ந் தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்தும், 17-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, இரவு 9 மணிக்கு தேர்பவனி போன்றவை நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான 18-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். 
Tags:    

Similar News