ஆன்மிகம்
தூய அன்னம்மாள்

புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-08-08 09:06 IST   |   Update On 2019-08-08 09:06:00 IST
நாகர்கோவில் வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை 9 மணிக்கு நற்கருணை ஆராதனை, பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா நடக்கிறது.

17-ந் தேதி காலை 7 மணிக்கு மறவன் குடியிருப்பு பங்குதந்தை பெஞ்சமின் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி, 18-ந் தேதி காலை 8 மணிக்கு மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்ற, தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டணி மறையுரையாற்றுகிறார்.

மதியம் 2 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்து நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ரவி காட்சன் கென்னடி, பங்கு பேரவை, பங்கு மக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

Similar News