ஆன்மிகம்
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்ததை படத்தில் காணலாம்.

புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-08-07 03:30 GMT   |   Update On 2019-08-07 03:30 GMT
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலய திருவிழாவுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவுக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், பங்கு தந்தை பென்சர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., 10-க்கும் மேற்பட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கிறிஸ்தவ மாணவர் இயக்கம் சார்பில் ஏழை மாணவிக்கு உயர்கல்வி பயில ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் தேர்பவனி வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
Tags:    

Similar News