ஆன்மிகம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் நேற்று இரவு அன்னையின் திருவுருவ பவனி நடந்த போது எடுத்த படம்.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி

Published On 2019-08-05 09:19 IST   |   Update On 2019-08-05 09:19:00 IST
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நேற்று இரவு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 437-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, மறையுரை ஆசீர், நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. விழாவையொட்டி கடந்த 28-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனி விழா நடந்தது.

10-வது திருநாளான நேற்று காலை 8-30 மணிக்கு நோயுற்றோருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும், இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவம் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 5-30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் இரண்டாம் திருப்பலியும், 7-30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக நின்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News