ஆன்மிகம்
தங்கச்சி மடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.

தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்

Published On 2019-07-17 05:27 GMT   |   Update On 2019-07-17 05:27 GMT
தங்கச்சி மடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 477-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய 3 மதத்தையும் குறிக்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு பகுதி கட்டப்பட்டுள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆலய திருவிழாவில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் தங்கச்சி மடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 477-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முதல்நாளான நேற்று ஆலயம் முன்பு சந்தியாகப்பரின் உருவம் பதித்த கொடியை ராமநாதபுரம் மறை வட்ட அதிபர் அருள் ஆனந்த் கொடியேற்றி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின், விழாக் குழுதலைவர் பூபதி ஆரோக்கியராஜன் மற்றும் கிராம தலைவர்கள் அந்தோணி சந்தியாகு, அந்தோணி செபஸ்தியான், முஸ்லிம் ஜமாத் தலைவர் ரப்பானி, ஜமாத் நிர்வாகி பசீர், இந்து சமுதாய நிர்வாகிகள் கோவிந்தன், நாகேந்திரன் உள்பட மும்மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News