ஆன்மிகம்

நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2019-06-27 03:25 GMT   |   Update On 2019-06-27 03:25 GMT
நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 29-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பியம் மற்றும் பக்தசபை ஒருங்கிணையங்களின் ஆண்டுவிழா, 30-ந்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆன்டணி தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 5 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மைப் பணியாளர் மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருப்பலி, கொடியிறக்கம், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா ஆகியவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்சன், பங்கு பேரவை துணை தலைவர் மெல்கியாஸ், செயலாளர் அல்போன்ஸ் போலி கார்ப், பொருளாளர் மெலோடியஸ் கிறிஸ்டோபர், துணை செயலாளர் ஜோஸ்பின் சைமன் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News