ஆன்மிகம்

சிலுவை அடையாளம்

Published On 2019-06-19 03:40 GMT   |   Update On 2019-06-19 03:40 GMT
“ சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபலனாயிருக்கிறது.” (1 கொரிந்தியர்: 1:18)
“ சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபலனாயிருக்கிறது.” (1 கொரிந்தியர்: 1:18)

கிறிஸ்தவத்தின் அடையாள சின்னமாக சிலுவை விளங்குகிறது. இந்த அடையாளத்தை நாம் ஆங்காங்கே அடிக்கடி பார்க்கும் விதமாக வைப்பது நல்லது. அது அடிக்கடி பாக்கப்பட வேண்டும். பாவம் என்பது எவ்வளவு பயங்கரமான ஒன்று என்பதை அது ஞாபகப்படுத்துகிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க ஏசு எவ்வளவு பெரிய கிரயத்தை செலுத்த வேண்டியிருந்தது என்பதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது. அதை பார்க்கும் போது மிகக்கொடிய தண்டனையாகிய சிலுவை மரணத்தின் மூலம் என்னுடைய பாவங்களிலிருந்து நான் மீட்கப்பட உதவி செய்தீரே என்று கர்த்தரை துதிக்கலாம். ஆனால் இவ்வித உணர்வுகளோடு சிலுவையை பார்ப்பவர்கள் எத்தனைபேர் என்று கேட்க வேண்டியுள்ளது. பல ஆலயங்களில் சிலுவை அடையாளம் என்பது இங்கே ஒரு கிறிஸ்துவ ஆலயம் இருக்கிறது என்பதை பிறருக்கு அடையாளம் காட்டவே பயன்படுகிறது. பலர் அந்த அடையாளத்தை நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்ட உபயோகிக்கிறார்கள்.

கிறிஸ்துவர்கள் அணியும் ஆபரணங்களிலும் இந்த அடையாளம் இடம் பெற்று அதை அணிந்துள்ளவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்கிறது. சிலுவை ஆசீர்வாத சின்னமாக மாற்றப்பட்டது. எனவே இந்த சிலுவையின் அடையாளம் இணையும் இடங்களில் ஆசிர்வாதங்கள் எதிர்பாக்கப்படுகிறது. சிலுவையை நெற்றியில் குறித்தல், வீட்டு சுவர்களிலோ, கதவுகளிலோ வரைந்து வைத்தல்.

சிலுவை அடையாளம் பொறித்த பொருட்களை உபயோகித்தல் போன்றவை கிறிஸ்தவ ஐதீகங்களாக மாறிவிட்டன. எப்படியோ சிலுவை மிக விரும்பப்பட்ட முக்கிய அடையாளமாகி விட்டது. ஆனால் சிலுவையின் உண்மையான அர்த்தங்கள் மறக்கப்பட்டுவிட்டன. சிலுவை அடையாளங்களை நம்மோடு வைத்திருப்பதாலும், சிலுவை அடையாளங்களை நாம உபயோகிக்கும் பொருட்களில் பொறிப்பதாலும் ஆசீர்வாதம் வரும் என்ற ஐதீக சிந்தனை மாற வேண்டும்.

சிலுவையை அல்ல சிலுவையில் நமக்காக அறைப்பட்ட ஏசுவின் ஐக்கியத்தை நம்மிடம் காண எப்போதும் சிலுவை மூலம் ஏசு நமக்காக உருவாக்கிய ரட்சிப்பின் அனுபவம் நம்மோடு இருக்க வேண்டும். நமக்கு தேவை சிலுவையின் அடையாளம் அல்ல. சிலுவையின் மூலமாக நமக்காக ஆயத்தமாக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு என்ற அடையாளமே அவசியம். சிலுவையை பார்ப்போம் ஆசீர்வாதத்துக்காக அல்ல ஆசீர்வாதம் உருவான வழியை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதற்காக.
Tags:    

Similar News