ஆன்மிகம்

முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நாளை தேர் பவனி

Published On 2019-02-05 04:07 GMT   |   Update On 2019-02-05 04:07 GMT
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான நாங்குநேரி அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நாளை நடக்கிறது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயமும் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி நடைபெற்று வந்தது.

8-ந் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புதுநன்மை திருப்பலியும், மாலையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. பிரதான திருவிழா மாலை ஆராதனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் திருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள் செபஸ்தியான் மற்றும் இறை மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News