ஆன்மிகம்

பணிவு பெருமை தரும்

Published On 2018-10-17 03:51 GMT   |   Update On 2018-10-17 03:51 GMT
நண்பர்களை இழந்துவிடுகிறோம். பதவிகளையும், பொருளையும் கூட இழந்து விடுகிறோம். எல்லோருக்கும் “தான்“ என்ற உணர்வு தலைக்குமேல் இருப்பதால் தலை கனத்துப்போகிறது.
சில பல நேரங்களில் நாம் நம்மையே முன்னிலைப்படுத்திப்பேசுவதால் உறவை இழந்துவிடுகிறோம்.

நண்பர்களை இழந்துவிடுகிறோம். பதவிகளையும், பொருளையும் கூட இழந்து விடுகிறோம். எல்லோருக்கும் “தான்“ என்ற உணர்வு தலைக்குமேல் இருப்பதால் தலை கனத்துப்போகிறது. நிலை தடுமாறுகிறது. நாம் பங்குபெறும் உரையாடல்களிலும்கூட விட்டுக்கொடுத்துப் பேசமாட்டோம். இத்தகைய மனப்பாங்கு நமக்கு வெற்றியைத் தருவதாக இல்லை. பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவுகிறோம்.

“என்னைப் பின்செல்பவன் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் ( மாற்கு 8:34)“ என்றார் ஏசு. முதலில் தன்னை மறுப்பவர்கள்தான் தலைமைப் பொறுப்புக்கும் தகுதியானவர்கள். தம்மைப் மறுப்பவர்கள்தான் கடவுளுக்கும் ஏற்றவர்கள்.

இந்தப் பணிவு என்ற பண்பு இல்லாமல் போனதால்தான் ஆதியிலே ஆதாம் ஏவாள் சிங்கார வனத்தை இழந்தனர். பழைய ஏற்பாட்டில் சவுல் மன்னன் தன் அரசபதவியை இழந்தான். தாவீதின் மகன் அப்சலோம் தன் தந்தையை இழந்தான். இவ்வாறு தாழ்ச்சி இல்லாதவர்கள் பலவற்றை இழக்க நேரிடும். உறவுகளை, நண்பர்களை, பதவிகளை, பொருட்களை இழக்கநேரிடும்.

ஏசு பலமுறை சொல்லியிருக்கிறார். தாழ்த்தப்படுபவன் உயர்த்தப் பெறுவான் என்று. தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. மாறாக அது வீரத்தின் அடையாளம் ஏசுபிரான் பாடுகளின் மத்தியிலும் நிலைத்தடுமாறாமல் நெஞ்சுரத்தோடுதான் சிலுவை சுமந்தார். ஏசு கடவுளுக்கு பணிந்து வாழ்ந்தார். நாமும் தாழ்ச்சியுடன் வாழ்கின்றபோது கடவுள் நம்மை உயர்த்தவே செய்வார்.

-அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு. 
Tags:    

Similar News