ஆன்மிகம்

பொறாமையை போக்க வழிகள் என்ன?

Published On 2018-10-15 04:04 GMT   |   Update On 2018-10-15 04:04 GMT
ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவரின் வழிகாட்டுதலும் உற்சாகப்படுத்துதலும் உரமாக அமைகின்றன. ஒருவரின் வளர்ச்சியைக்கண்டு சாதாரணமாக நாம் மகிழவேண்டும். அதைவிட்டு நாம் பொறாமைப்படுகிறோம். சஞ்சலப்படுகிறோம்.
ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவரின் வழிகாட்டுதலும் உற்சாகப்படுத்துதலும் உரமாக அமைகின்றன. இதைப்போல ஒருவரின் வீழ்ச்சிக்கும் மற்றொருவரின் வழிமறைத்தலும் பொறாமைகுணமும் விஷமாக அமைகின்றன. ஒருவரின் வளர்ச்சியைக்கண்டு சாதாரணமாக நாம் மகிழவேண்டும். அதைவிட்டு நாம் பொறாமைப்படுகிறோம். சஞ்சலப்படுகிறோம்.

கவலைப் படுகிறோம். இது யாருடைய தூண்டுதல் என்றால் சாத்தானின் தூண்டுதல்தான். சாத்தான் மனிதனின் வீழ்ச்சியில் மகிழ்ச்சியடைகிறான். பொறாமைக்குணம் படைத்தவர்கள் பிறரின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்க இயலாமல் அவர்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். இந்த பொறாமை உணர்வு தான் ஏசுவின் சிலுவைச்சாவுக்கு காரணமாக இருந்தது. ஏசுவின் வளர்ச்சியைக் கண்டு அவருடைய பணியின் வேகத்தைக் கண்டு அவருடைய எதிரிகள் பொறாமைப்பட்டனர். “அவர்கள் பொறாமையால்தான் ஏசுவைத் தன்னிடம் ஒப்புவித்தார்கள் என்று ஆளுநன் பிலாத்துக்கு தெரியும் (மத் 27:18)”

பிறந்த பாலன் ஏசு எங்கே தனக்கு எதிராக ஒரு அரசராக உருவெடுத்துவிடுவாரோ என்று ஏரோது மன்னன் பொறாமைப்பட்டான். பழைய ஏற்பாட்டில் காயின் பொறாமையால் தன் தம்பி ஆபேலைக் கொன்றான். உலக வரலாற்றில் நடந்த முதல் கொலை பொறாமையால்தான் என்று திருவிவிலியம் பதிவு செய்திருக்கிறது. யோசேப்பை அவருடைய சகோதரர்கள் பொறாமையால் துன்பப்படுத்தி எகிப்து வியாபாரிகளுக்கு விற்று விட்டனர்.

இப்படி பொறாமை உலக வரலாற்றில் பல உயிர்களை எடுத்திருக்கிறது. பல பேரரசுகளை வீழ்த்தியிருக்கிறது. நம்மிடம் இந்த குணம் பதுங்கி இருக்கிறதா? பொறாமையை விரட்ட வேண்டும் என்றால் நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். பிறரின் நலனிலும் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியடைபவர்களாக இருக்கவேண்டும். இதனால் தான் ஏசுபிரான் சொன்னார். பிறருக்காக செபியுங்கள் என்று அதுவும் பகைவர்களுக்காகவும் மன்றாடுங்கள் என்றார். அன்பால்தான் பகையை அழிக்க முடியும். தீயதை நல்லதால்தான் வெல்லமுடியும் அன்பு செய்வோமா?

- அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு 
Tags:    

Similar News