ஆன்மிகம்

சிலுவை உணர்த்தும் போதனை

Published On 2018-10-08 05:26 GMT   |   Update On 2018-10-08 05:26 GMT
மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை என்பதே விவிலிய கருத்து.
புதிதாக ஒரு மூங்கில் செடி முளைத்து மண்ணை விட்டு வெளிவர 5 ஆண்டுகள் ஆகும். அந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மூங்கில் செடியானது ஒரு நாளைக்கு 2 அடி வீதம் உயரமாக வளர்ந்து மரமாகும். அதன்பிறகு அந்த மூங்கில் மரமானது தனது உயரத்தை தக்க வைத்து கொள்ள 5 ஆண்டுகள் வரை தனது வேர்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும். அதுபோல நாமும் நம்முடைய உறவுகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, சமூகத்தில் வியக்க வைக்கும் மனிதர்களாக இருப்போம்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் உண்மை கிறிஸ்தவர்களாக மாற வேண்டுமா? அப்படியானால் உங்கள் கருத்துகளில் சிலுவையை அணியாதீர்கள். மாறாக உங்கள் கருத்துகளை சிலுவையில் அணியுங்கள் என்றார் ஓஷோ. சிலுவை என்பது கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலம். கடவுள் ஒருவரே, மனிதர் அனைவருக்கும் சமம்.

மனித உறவில் தான் இறை உறவு வளர்கிறது என்பதே சிலுவை உணர்த்தும் ஆன்மிக சிந்தனை ஆகும். படுக்கை வசமான மரமும், செங்குத்தான மரமும் இணைகின்ற போது தான் சிலுவை தோற்றம் உருவாகிறது. அது முழுமை அடைகிறது. இதில் செங்குத்தாக இருக்கக்கூடிய மரம், இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துகின்றது. படுக்கை வசமான மரம் மனிதர்களோடு நாம் கொண்டுள்ள உறவை குறிக்கிறது. இங்கு இறையுறவும், மனித உறவும் சங்கமிக்கின்ற போது தான் சிலுவை முழுமை அமைகிறது.

கடவுள் ஒருவரே, வேறு கடவுள் உமக்கு இல்லாமல் போவதாக என்ற கிறிஸ்தவ விசுவாச கூற்றை இங்கு நினைவு கூறுவோம். படுக்கை வசமான மரம் உணர்த்த கூடிய செய்தி மாந்தர் அனைவரும் சமம். பிறப்பாலோ, வாழ்வாலோ யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக்கூடாது. கிறிஸ்துவுக்கு முன் அனைவரும் சமம். மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை என்பதே விவிலிய கருத்து. எனவே தவக்காலத்தில் இறை உறவோடு ஒன்றி வாழ்ந்து பயணிப்போம்.

-சகோதரி.அமலஅன்னை.
Tags:    

Similar News