ஆன்மிகம்

இறைவனின் சட்டம்

Published On 2018-08-01 03:46 GMT   |   Update On 2018-08-01 03:46 GMT
இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர்.
இறைவனுக்கு உகந்த மக்களாக, பிள்ளைகளாக வாழ் வதற்கு நம்மை தகுதியாக்கி கொள்ள இறைவன், மோசே வழியாக கொடுத்த சட்டங்களும், முறைகளும், நியமங்களும் தான் அடிப்படை தேவைகள். அன்றில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ சமூகம், இஸ்ரேல் மக்களை மாதிரியாக கொண்டே அதன் தலைவரை பின்பற்றுகின்றது.

இறைவாக்கினர் கூற்று இறைவனின் கூற்று என்பதை அன்றைய திருச்சபையும், இன்றைய திருச்சபையும் உணர்ந்து உள்வாங்கி செயல்படுகின்றது. இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் புதிய இனமாக, புதிய மக்களாக, இறைவனோடு வாழ, மோசேயின் சட்டங்கள் உதவி செய்தன. இப்்போது நமது திருச்சபையில் திருத்தந்தையின் அறிவுரைகளும், திருத்தங்களும், நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ வழிவகை செய்கிறது.

இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர். இஸ்ரேல் மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும், பின்னி ஒன்றிணைந்து வாழ்ந்த இறைவன், இன்று நம்முடனும், நமது திருச்சபையுடனும் ஒன்றித்து வாழ்கிறார். இறைவன் நம் அருகில் உள்ளார் என்கிற தெய்வபயம,் நமக்கு அவரின் சட்டங்களை கடைப்பிடிக்க உதவி செய்யும்.

இயேசு கிறிஸ்துவே! இந்த சட்டங்கள், நியமங்கள், அனைத்தின் முழுமை என்று நற்செய்தியில் சான்று அளிக்கிறார். அவரை பின்பற்றுவதே, சட்டம் அனைத்தையும் பின்பற்றுவது ஆகும். இந்த சட்டங்களையும், நியமங்களையும் நிறைவேற்ற, ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது. சுதந்திரம் என்பது விரும்பிய எதையும் செய்வதன்று.

விரும்பியதெல்லாம் செய்வது சுதந்திரம் அல்ல. அது கட்டுப்பாடற்ற தன்மையாகும். சட்டங்கள் அனைத்தையும் உதறிதள்ளுவது உண்மையான சுதந்திரம் அல்ல. மாறாக சின்னஞ் சிறு கட்டளைகள் ஒவ்வொன்றையும,் இயேசுவின் பெயரால் கடைபிடித்து அன்போடு வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அன்பிற்காக சட்டங்களுக்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை.

கிருபாகரன்,மறைப்பணி நிலையம், குடந்தை. 
Tags:    

Similar News