ஆன்மிகம்

கடவுளின் அன்பு கட்டளை

Published On 2018-05-02 09:04 IST   |   Update On 2018-05-02 09:04:00 IST
கடவுள், மோசே வழியாக நமக்கு கொடுத்த கட்டளைகள் 10. அந்த 10 கட்டளைகளும் நாளடைவில் பெருகி 613 கட்டளைகள் ஆனது. அதில் 248 கட்டளைகள், ஒரு சில வேளைகளில் மக்களுக்கு சாதகமானதாகவே இருந்தது.
கடவுள், மோசே வழியாக நமக்கு கொடுத்த கட்டளைகள் 10. அந்த 10 கட்டளைகளும் நாளடைவில் பெருகி 613 கட்டளைகள் ஆனது. அதில் 248 கட்டளைகள், ஒரு சில வேளைகளில் மக்களுக்கு சாதகமானதாகவே இருந்தது. ஆனால் எஞ்சியுள்ள 365 கட்டளைகளும், ஒரு சில வேலைகளை செய்யக்கூடாது என்றிருந்தது. இத்தகைய கட்டளைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு சிலர் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அந்த கட்டளைகளை கடைபிடிக்க, புதிய ஏற்பாட்டில் இயேசு சிறிய இரண்டு வழிகளை காட்டியுள்ளார். அதாவது இரண்டு கட்டளை எடுத்துக்காட்டியுள்ளார்.

(மத்தேயு 22:37-39) ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து‘. இதுவே தலை சிறந்த முழுமையான கட்டளை. ‘உன் மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக‘ என்பது அதற்கு இணையான இரண்டாவது கட்டளை. இவ்வாறு இயேசு அனைத்து கட்டளைகளையும் சுருக்கி இரண்டு கட்டளைகளை நமக்கு தந்தார். இந்த இரண்டு கட்டளைகளையும் கடைபிடிக்க நம்மால் முடியாது என்பதை உணர்ந்த இயேசு, இரண்டையும் சுருக்கி ஒரு கட்டளையாக கொடுத்தார்.

(யோவான் 13:34) ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்‘. நாம் மற்றவர்களிடம் அன்பு செலுத்தும் போது, அவர்களை பற்றி தவறாக பேசவோ, அவர்கள் மீது பொறாமையோ கொள்ள மாட்டோம். அவ்வாறு நாம் அன்பு செய்து வாழ்கின்ற போது, நமக்கும் மற்றவர்களுக்குமான உறவு நல்லதாக இருக்கும். இவ்வாறு வாழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கட்டளை ஒன்று தான். அதுதான் அன்புக்கட்டளை.

அருட்பணி. பிரபின் சூசடிமை, சலேசிய சபை,

சவேரியார் பாளையம் பங்கு, திண்டுக்கல். 

Similar News