ஆன்மிகம்

தவக்கால சிந்தனைகள்: வார்த்தையின் வலிமையும், வல்லமையும்

Published On 2018-03-23 09:04 IST   |   Update On 2018-03-23 09:04:00 IST
கடவுளின் வார்த்தை வலிமையும், வல்லமையும் நிறைந்தது ஆகும். அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்க வேண்டும் இந்த தவக்காலத்தில் மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுவதும்.
இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் மிக்கது. அதன் உண்மையான அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ளும் போது....

இணைசட்டம் 11:18 “என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும், நினைவிலும் நிறுத்துங்கள்”.

இணைசட்டம் 32:47 “இத்திருச்சட்டத்தின் எந்த வார்த்தையும் வீணானதல்ல. இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

யோசுவா 1:8 “இந்த திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனை தியானம் செய்து இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைபிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய். வெற்றி காண்பாய்”.

திருப்பாடல் 119:50 “உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஏனெனில் அது எனக்கு வாழ் வளிக்கின்றது”.

நீதி மொழிகள் 30:5 “கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பதக்கதாய் விளங்குகிறது”.

சாலமோனின் ஞானம் 16:26 “ஆண்டவரே! மனிதரை பேணிகாப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல. உமது சொல்லே, உம்மை நம்பினோரை காப்பாற்றுகிறது.

1.பேதுரு 1:23 நீங்கள் அழியகூடிய வித்தினால் அல்ல: மாறாக உயிருள்ளதும் நிலைத்திருப்பதுமான அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளர்....

ஆக கடவுளின் வார்த்தை வலிமையும், வல்லமையும் நிறைந்தது ஆகும். அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்க வேண்டும் இந்த தவக்காலத்தில் மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுவதும். புனித எரோணிமுஸ் இவ்வாறு சொல்வார், “திருவிவிலியத்தில் நாம் வாசிக்கும் இறைவார்த்தை உண்மையான உணவும், பானமும் ஆகும்.” எனவே நம் இறைவார்த்தையை கடைபிடிப்போம். இயேசுவின் உண்மை சீடர்களாவோம்.

- அருட்திரு. ஆல்பர்ட் புஷ்பராஜ், பங்குத்தந்தை, புனித அன்னாள் ஆலயம், கீழ நெடுவாய்.

Similar News