ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: மன்னிப்பின் மாண்பு

Published On 2018-03-05 08:18 IST   |   Update On 2018-03-05 08:18:00 IST
மன்னிப்பதற்கு ஏசுபிரான் ஒரு வரையரையைக் குறிப்பிடவில்லை, கணக்கில் வைக்காமல் மன்னியுங்கள் என்றார். தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்து உதவிய பொருளையும் சேர்த்து மன்னியுங்கள் என்றார்.
அந்த தாயின் ஒரே செல்ல மகளை எதிர்வீட்டுக் கயவன் கற்பழித்துக் கொன்றுவிட்டு தலைமறைவானான். காவல்துறை அவனை கண்டுபிடித்து பல ஆண்டுகாலம் சிறையில் அடைத்தது. அந்த தாயோ விவிலியத்தை புரட்டிப்படித்த வண்ணமிருந்தாள்.

அவளுடைய உள்ளத்தை கிளறின விவிலிய வார்த்தைகளுள் ஒன்று அது ‘மன்னித்து விடு’ என்பதாகவும். அவ்வார்த்தையை அசைபோட்ட அவள் ஒரு நாள் அந்தக் கொளையாளியை மனப்பூர்வமாக மன்னித்து விட்டதாக கடிதம் ஒன்று எழுதினாள். அந்த கடிதத்தை படித்த அவனும் ‘அம்மா நீங்கள் என்னை மன்னித்தாலும், கடவுளும் என்னை மன்னிக்கிறார்.

இனி நான் எந்த தவறும் செய்யாமல் பல உயிர்களை காக்கும் போராளியாக உருவெடுப்பேன். உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எனக்காக ஜெபியுங்கள்’ என்று பதிலளித்தான். விடுதலையான அவன் திருமணம் செய்துகொள்ளாமல் சமூக சேவகராக வாழ்ந்து சமூகத்தின் நன்மதிப்பை பெற்றான். ஏசுபிரான் மன்னித்தார், மன்னிக்க சொன்னார், தன்னை இகழ்ந்தவர்களையும், சிலுவையில் ஏற்றி கொன்றவர்களையும் மனதார மன்னித்தார்.

மன்னிப்பு மனமாற்றத்தை பெற்றெடுக்கிறது. மனமாற்றம் மகிழ்ச்சியை பெற்றெடுக்கிறது. நாம் பிறரை மன்னிக்கின்ற போதுதான் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை பெறுகின்றோம். மன்னிப்பதற்கு ஏசுபிரான் ஒரு வரையரையைக் குறிப்பிடவில்லை, கணக்கில் வைக்காமல் மன்னியுங்கள் என்றார். தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்து உதவிய பொருளையும் சேர்த்து மன்னியுங்கள் என்றார். மன்னிப்போமா? இறைவனின் குழந்தைகள் என்ற முத்திரையைப் பெறுவோமா?

- குழந்தை, காணியிருப்பு.

Similar News