கிறித்தவம்
புனித சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Update: 2022-05-23 03:47 GMT
புதிய சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம் ஏற்றினார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் சகாய அன்னை ஆலயத்தின் 20-வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரம் அர்ச்சிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு புதிய கொடிமரத்தை அர்ச்சித்தார்.

வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ் கல்வெட்டை திறந்து வைத்தார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியோடு தேர்பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. புதிய சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம் ஏற்றினார்.

தொடர்ந்து திருவிழா திருப்பலி நடந்தது. விழாவில், கோவில்பட்டி வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ், அருட்தந்தைகள் அந்தோணிராஜ், ஆரோக்கியசாமி, பிராங்களின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வேதராஜ் செய்திருந்தார்.
Tags:    

Similar News