கிறித்தவம்
பெரிய வியாழனையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழனையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்ச்சி

Update: 2022-04-15 02:15 GMT
17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.
ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்றார். இந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெரிய வியாழனையொட்டி நேற்று வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சீடர்கள் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பங்குத்தந்தை அற்புதராஜ், சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். முன்னதாக பாதிரியார்கள் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இன்று(வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவை நடக்கிறது.

17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.
Tags:    

Similar News