கிறித்தவம்
கயத்தாறில் புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

கயத்தாறில் புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

Update: 2022-02-14 04:13 GMT
கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா தேர் பவனியில் வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து, உப்பு, மிளகு வழங்கி வழிபாடு நடத்தினர்.
கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு, ஆராதனை நடைபெற்று வந்தன.

நேற்று அதிகாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தேர் பவனி நடந்தது. இந்த தேர் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தது. வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து, உப்பு, மிளகு வழங்கி வழிபாடு நடத்தினர்.

மதியம் ஒரு மணிக்கு தேர் ஆலயம் முன்பு வந்தடைந்தது. இதில் பங்குத்தந்தைகள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News