ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் இன்று (வியாழக்கிழமை) திருப்பலி நடக்கிறது.
இன்று (வியாழக்கிழமை) காலையில் திருப்பலி நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நன்றி திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு தலைமை மற்றும் மறையுரை ஆற்றுகிறார். விழா ஏற்பாடுகளை அதிபர், பங்குதந்தைகள், பங்கு அருட்பணி பேரவையினர், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.