கயத்தாறு சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும்.
இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும். 10-ம் நாளில் சப்பர பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலையால்நடந்தான் குளம் திருக்குடும்ப சபை குருக்கள், கயத்தாறு அமலவை கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.