மாலன்விளை சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழாவில் பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ச்சித்தார்.
மாலன்விளை சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா: பேராயர் செல்லையா பங்கேற்பு
பதிவு: டிசம்பர் 01, 2020 09:27
புதிய ஆலயத்தை பேராயர் செல்லையா அர்ச்சித்த போது எடுத்த படம்.
மார்த்தாண்டம் சேகரத்துக்கு உட்பட்ட மாலன்விளை சி.எஸ்.ஐ. பாஸ்ட்ரேட் சபை சார்பில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. இதன் அர்ப்பண விழா மற்றும் 45-வது சபை நாள் விழா நடந்தது. மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். சபை போதகர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சி.எஸ்.ஐ. குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்து அர்ச்சித்து ஆசியுரை வழங்கினார். ஆதீன மாமன்ற உறுப்பினர் ஜெயசிங் வரவேற்று பேசினார். சபை செயலாளர் பிராங்ளின் ஜோஸ் அறிக்கை படித்தார். பொருளாளர் மற்றும் கட்டிட குழு கன்வீனர் ராஜரத்தினம் ஆலய கட்டிட அறிக்கை சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியில், பேராய செயலாளர் பைஜூ நிசித்பால், துணைத்தலைவர் தம்பி விஜயகுமார், பொருளாளர் தங்கராஜ், முன்னாள் செயலாளர்கள் கிறிஸ்டின் பாபு, அசோகன் சாலமன், விஜயதரணி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன், பங்குத்தந்தை அருள், காஞ்சிரகோடு மண்டல கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், பெரும்புளி லூத்தரன் சபை போதகர் பென்ஜமின், மார்த்தாண்டம் வர்த்தக சங்க துணைத்தலைவர் சுந்தர்ராஜ், சபை கமிட்டி உறுப்பினர்கள் ராஜ ஜஸ்டின், எபிராஜ், சுபா மல்லிக குமாரி, ரமேஷ், ஜான் ஜெயசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சபை போதகர் விஜயகுமார் தலைமையில் சபை குழு, கட்டிட குழு மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :